சினிமாவான ராஜேஷ்குமார் நாவல்: நாளை ரிலீஸ் | 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | அமிதாப், அபிஷேக்கை கொல்ல 200 பேர் தயார்: தாதாக்கள் பகிரங்க மிரட்டல் | பொங்கல் ரேசில் இன்னொரு படமா...? : அருண் விஜயின் பிறந்தநாளில் இருளன் முதல்பார்வை வெளியீடு | தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை: அப்பா நடிகர் மீது போலீசில் புகார் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி விஜயகுமாரை அடையாளம் காட்டிய 'அம்மா வந்தாச்சு' | பிளாஷ்பேக்: 100வது படத்தில் நூற்றாண்டு சாதனை | டோரதியால் பெருமை - கீர்த்தி சுரேஷ் : மேடையிலேயே மோதிரம் பரிசளித்த மிஷ்கின் | சூர்யா படத்தில் வில்லனா? கோபிசந்த் தரப்பு மறுப்பு | சல்மான் கானின் 'மாத்ருபூமி' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் |

கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் புகழ்பெற்ற நாவல் 'வயலெட் கனவு'. இந்த நாவல் திரைப்படமாகி உள்ளது. பி.நித்யானந்தம் என்பவர் இயக்கி உள்ளார். அப்பு மூவீஸ் சார்பில் பாபு தூயவன், முஸ்தரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். விவந்த் விவின், ரெய்னா கரட், ஆர்.அரவிந்தராஜ் நடித்துள்ளனர். ஜி.கிதாகரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜெகன் கல்யாண் இசையமைத்திருக்கிறார். படம் நாளை (நவ.20) வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “ராஜேஷ்குமாரின் சில நாவல்களை, ஓடிடி மற்றும் யுடியூப் சேனல்களுக்காக சிறிய அளவிலான படமாக இயக்கி வைத்திருந்தேன். அதை பார்த்த தயாரிப்பாளர் பாபு தூயவன், இதுபோல் எனக்கும் ஒரு திரைப்படம் இயக்கி கொடுங்கள் என்றார். அப்படித்தான் இந்த படம் உருவானது.
இது ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ராஜேஷ்குமாரின் நாவல்களை படிக்கும் போதே ஒரு திரைப்படம் பார்ப்பது போல் தான் இருக்கும். அந்த வகையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அவரது கதை, திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.
கதையின் நாயகனுக்கு ஒரே மாதிரியான கனவு வருகிறது. அந்த கனவில் நடக்கும் சம்பவங்கள் நடந்து விடுமோ, என்று அச்சப்படும் நாயகன் அதனல் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான். அதே சமயம், அவனை சுற்றி நடக்கும் சில சம்பவங்களும் அவனுக்கு உளவியல் பாதிப்பை கொடுக்க, அதன் பின்னணியில் இருப்பது யார்? என்ற அதிர்ச்சியான கேள்விக்கு எதிர்பார்க்காத திருப்பங்களோடு பதில் சொல்வது தான் கதை” என்றார்.




