Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிர் தப்பியது தான் கிருஷ்ணர் மீதான பக்தியை ஆழமாக்கியது" : காஜல் அகர்வால்

22 நவ, 2026 - 06:11 IST
எழுத்தின் அளவு:
Kajal-Aggarwal-Survival-on-Indian-2-Deepened-Devotion-to-Krishna
Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 90களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது. அதேசமயம் இந்தப்படம் துவங்கப்பட்ட போது கடந்த 2020-ல் சென்னையில் உள்ள அரங்கு ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அதில் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அன்றைய படப்பிடிப்பில் தானும் இருந்ததாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர நீண்ட நாளானது என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார் படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால். அப்போது படமாக்கப்பட்டு வந்த ஒரு சண்டைக் காட்சிக்காக 80 வயது மூதாட்டி தோற்றத்தில் மேக்கப் போட்டு காஜல் அகர்வால் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தாராம். வழக்கமாக அமரும் மானிட்டர் அருகே அவர்கள் அமர்ந்திருந்த போது திடீரெனக் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுப் பலரும் ஓடத் துவங்கியுள்ளனர். அப்படி காஜல் அகர்வால் ஓடும் போது ஒரு மேசையில் மோதி கீழே விழுந்தாராம்.. அந்த நேரத்தில், "நான் ஏன் ஓடுகிறேன்? திரும்பிப் பார்த்து என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம்" என்று திரும்பிப் பார்த்தபோதுதான் மேலே இருந்த அந்த கிரேன் தன் பக்கம் நோக்கி விழுவதைக் கண்டதாக அதில் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்ததாகவும், அதிர்ச்சியில் உறைந்து நின்ற போது ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அல்லது ஒரு கை தன்னை அந்த இடத்தில் இருந்து இழுத்துப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் கூறியுள்ளார் காஜல் அகர்வால். விபத்திற்குப் பிறகு குழுவினர் ஓடி வந்து தன்னிடம் நலம் விசாரித்த போது, தன்னை யாராவது இழுத்தார்களா என காஜல் அகர்வால் கேட்டபோது அனைவரும் தொலைவில் இருந்ததாகவும், யாரும் அவரை இழுக்கவில்லை என்றும் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போன காஜல், தன்னைக் காப்பாற்றியது யார் என்பது இன்றுவரை ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் உயிருடன் இருப்பதே ஒரு அதிசயம் போலத் தோன்றியதாகவும், அந்த விபத்திற்குப் பிறகு கிருஷ்ண பகவான் மீது ஆழமான பக்தியும் ஆன்மீக நாட்டமும் உருவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொல்லியல் ஆய்வாளராக நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி : வருட இறுதியில் வெற்றியை பெறுவாரா?தொல்லியல் ஆய்வாளராக நடித்துள்ள ... மூன்று நாளில் ரூ.100 கோடி வசூலித்த 'ஓம்' மூன்று நாளில் ரூ.100 கோடி வசூலித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap