காசி அண்ணா தியேட்டரில் கைலாயம் போல் செட் அமைத்த ரசிகர்கள் | வில்லியாக நடிக்க ஆசை: 'மொத ராத்திரி' பானு பிரியா | அழகிற்கு அப்படி என்ன மெனக்கெடல் ஸ்ரீபவியின் ரகசியம் | 'ஏஒடி' படம் பார்த்துவிட்டு சவாலில் தோல்வி : ஒரு லட்சம் கொடுத்த இயக்குனர் சுகுமார் | 'டேர் டெவில்' தொடர் படப்பிடிப்பு : அஜித்தின் அன்புக் கட்டளை | பத்ரகாளி, அருந்ததி, அண்ணாத்த : ஞாயிறு திரைப்படங்கள் | சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ் | பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஷாருக்கான் - கரீனா கபூர் | மிக விரைவில் வாரணாசி அப்டேட் : ராஜமவுலி சொன்ன தகவல் |

நடிகை திரிஷா பெயரில் நெல்லையில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை என்ற அமைப்பு, நோக்கம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை அதற்கு திரிஷா தரப்பில் இருந்து விளக்கமோ, எதிர்ப்போ வரவில்லை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கையும் வரவில்லை. இதனால் இந்த அமைப்பை திரிஷா ஆதரிக்கிறாரா அல்லது அவரது சம்மதத்துடன் தான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது.
நடிகை திரிஷாவும், அனிருத்தும் நல்ல நண்பர்கள். ஆனால், அவர் திருமண வரவேற்பில் திரிஷா கலந்துகொள்ளவில்லை. அது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா ( தெலுங்கு) மோகன்லாலுடன் ராம் என்ற மலையாள படம், த்வித்வா என்ற கன்னட படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். இதெல்லாம் அவர் முன்பு நடித்த படங்கள்.
இப்போது ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி ஆகியோருடன் இணைந்து ஒரு திகில் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதையும் சில மாதங்களாக குறைத்துவிட்டார். அவர் மனதில் என்ன திட்டமோ என கேள்வி எழுந்துள்ளது.




