திரைப்படங்களில் ‛கஞ்சா' பயன்படுத்தும் காட்சி இருக்க கூடாது : ஜிவி பிரகாஷ் | ‛திரிஷ்யம் 3' ஹிந்தி அக்., 2ல் ரிலீஸ் | டாக்சிக் எனக்கு புதிய பாதையை அமைக்கும் : யஷ் நம்பிக்கை | தஞ்சையில் துவங்கிய ஜி.வி.பிரகாஷின் ‛நிஞ்சா' படப்பிடிப்பு | மூன்றே நாளில் 80 கோடி கடந்த 'இருமுடி' | ‛தி டார்க் ஹெவன்' படம் செப்., 18ல் ரிலீஸ் | அடுத்தாண்டு ஜன., 8ல் ‛மகாகாளி' ரிலீஸ் | சினிமாவில் கேரக்டரின் வெற்றிக்காக கெட்டப்பை மாற்ற அதிகம் மெனகெட்ட தமிழ் நடிகர், நடிகைகள் | ஹிந்தி தெரிந்தால் சினிமா வாய்ப்புகள் வரும் : வர்ஷினி | திரிஷ்யம் 4ம் பாகம் : தயாரிப்பாளர், இயக்குநர் உறுதி |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வந்த படம் 'இந்தியன் 2'. 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவுற்றபோது, விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பிரச்சனை, கமல் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட சில காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்து வருகிறது. இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைக்கா வழக்கு தொடர்ந்தது. அதேசமயம் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி மத்தியஸ்தராக இருந்து இருதரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துபடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 'இந்தியன் 2' பட பிரச்சனையில் ஷங்கர் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை கமல் முடித்த பிறகு 'இந்தியன் 2' படத்தை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நீடித்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.