ஒரே வாரத்தில் போட்டி போடும் துல்கர் சல்மான், நிவின் பாலி | டிவி நிகழ்ச்சிக்கு சல்மான் கான் பெறும் அதிக சம்பளம் | டிராகன் படத்தில் கெஸ்ட் ரோலில் ஷாகித் கபூர், ஆலியா பட் | இருமுடி படத்திற்குப் பிறகு தனுஷை இயக்கும் சிவா நிர்வானா | அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன ரவுடி ஜனார்த்தனா | ராக்கா படம் அடுத்தாண்டு டிசம்பர் 31ல் ரிலீஸ் | சினிமாக்களால் அதிகம் பிரபலமான தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்கள் | சென்சார் சிக்கலில் மாட்டிய பேய் படம் | பொங்கலுக்கு வரல... ஆனால் தீபாவளிக்கு சர்ப்ரைஸ் இருக்கு : அரசன் அப்டேட் தந்த சிம்பு | நோ டப்பிங்...நோ டூப்... ரியல் திறமையை காட்டி அசத்தும் நடிகர், நடிகைகள் |

'கே.ஜி.எப்' படம் மூலம் பிரபல இயக்குநராக உருவெடுத்த பிரசாந்த் நீல், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 'டிராகன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம், அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தன் நடகவுடா என்பவர் '418' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிடுகிறார். இது ஒரு ஹாரர் படமாக உருவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் சென்சார் சிக்கலால் ரிலீஸ் தாமதாகி வருகிறது.
குறிப்பாக, அதிகப்படியான பேய் காட்சிகள் மற்றும் திகில் அம்சங்கள் இப்படத்தில் இருப்பதாகக் கூறி, தணிக்கை குழு இதற்கு சான்றிதழ் அளிக்க ஆட்சேபனை தெரிவித்துள்ளதாம்.. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் உடனடியாக ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி வைத்து தணிக்கை சான்றிதழ் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, "ஒரு பேய் படத்தில் திகில் காட்சிகள் இல்லாமல் வேறு என்ன இருக்கும்? இதைக் காரணம் காட்டி சான்றிதழ் வழங்க மறுப்பது இருப்பதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை" என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.