'கட்டா குஸ்தி 2' : 3 நாள் வசூல் என்ன தெரியுமா? | அல்லு அர்ஜுனுக்கு நிம்மதி! சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் காணொளி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி! | 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி, இந்த வாரம் தெரிந்துவிடும்… | வெளியான 2 நாளில் இந்தியாவில் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட 'சட்லஜ்' திரைப்படம் | 'டிரைவிங் லைசன்ஸ்' படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது ஏன் ? ; 7 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் விளக்கம் | ‛பாஸ் ஸ்கேம்' மூலம் ரூ.38.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி : கமல் நிறுவனம் புகார் | மாற்றம் வந்தது அக்கறையால் அல்ல, பயத்தால் ! பார்வதி ஓப்பன் டாக் | இறுதி ஊர்வலத்திற்கான பாடல்; இப்போதே ரெடி செய்த ஜாக்கிசான் | தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன் | ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை |

பரத் நடிப்பில் 2019ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காளிதாஸ்'. அறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கியிருந்தார். பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அதையும் ஸ்ரீசெந்தில் இயக்கியுள்ளார், பரத் நாயகனாக நடித்துள்ளார்.
அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி உட்பட பலரும் நடிக்கிறார்கள். 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா இதில் முக்கியமான வேடத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதே சமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர்.