Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் | மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா | "இனியாவது திருமணம் செய்வீர்களா ?" - 51 வயது பாலிவுட் நாயகி சொன்ன பதில் | ஏழு வருடத்திற்கு பிறகு 'கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம் | விழா மேடையில் ரவீனா டாண்டனை நாய் கடிக்க முயன்றதால் பரபரப்பு | மோகன்லாலின் மகள் அறிமுகப் படம் ரிலீஸ்: மம்முட்டி வாழ்த்து | காவி உடை சர்ச்சையில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர் | ஹாலிவுட் 2026 : 1000 மில்லியன் வசூல் கடந்த 4 படங்கள் | வாரணாசி படத்திலிருந்து மேலும் ஒரு வீடியோ கசிவு | ராமாயணா படம் சர்வதேச அளவில் 50,000 திரையரங்குகளில் ரிலீஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: திருமணத்திற்காக பெயரை மாற்றிய ஷாருக்கான்

19 ஜூலை, 2026 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Flashback-Shah-Rukh-Khan-Changed-His-Name-To-Abhinav-To-Meet-Wife-Gauris-Parents:
Advertisement


சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், கவுரி ஸ்ப்ராட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் அமீர்கான் 'லவ் ஜிகாத்'தில் ஈடுபடுகிறார் என்றும் சர்ச்சை எழுந்தது. ஆனால் கவுரி கிறிஸ்தவப் பெண் என்றும், தாங்கள் விரும்பியே திருமணம் செய்துகொண்டதால் யாரும் யாருடைய மதத்தையும் மாற்றிக்கொண்டு திருமணம் செய்யவில்லை என்றும் ஒரு விளக்கம் அளித்திருந்தார். இதே போல ஒரு சுவாரசியமான விஷயம் நடிகர் ஷாருக்கானின் திருமணத்தின் போதும் நடைபெற்றுள்ளது. இந்தச் சுவாரசியத் தகவல் முஸ்தாக் ஷேக் என்பவர் எழுதிய 'ஷாருக் கேன்' (sharukh can) என்கிற புத்தகத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

ஷாருக்கானின் மனைவியான கவுரி இந்து மதத்தைச் சேர்ந்தவர். அப்போது இவர்களது காதலுக்கு கவுரியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஷாருக்கான் தனது பெயரை 'அபினவ்' என்று மாற்றிக்கொண்டாராம். அது மட்டுமல்ல, 'ஜிதேந்திர குமார் துல்லி' என்கிற பெயரையும் அவர் பயன்படுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து முறைப்படியான திருமணத்தின் போது ஷாருக்கான் இப்படி இந்து பெயரைப் பயன்படுத்தியது போல, கவுரியும் முஸ்லிம் முறையிலான நிக்காஹ்வின் போது தனது பெயரை 'ஆயிஷா' என்று தற்காலிகமாக மாற்றிக்கொண்டாராம்.

ஆனாலும் இவர்கள் இருவரும் யாரொருவரின் மதத்திற்கும் மதம் மாறாமலேயே திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்காக தன்னை இந்துப் பையன் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக ஷாருக்கான் தனது பெயரை மாற்றியது குழந்தைத்தனமாகவும் முதிர்ச்சியற்ற செயலாகவும் இப்போது தோன்றுகிறது என்று கவுரி கூறியதாக அந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
போர்வீரர் லச்சித் போர்புகனின் வாழ்க்கை படத்தை இயக்கும் ஆதித்யா தர்போர்வீரர் லச்சித் போர்புகனின் ... சாய் பல்லவியின் 'ஏக் தின்' ஓடிடியில் இந்தியாவிலும் வெளியீடு! சாய் பல்லவியின் 'ஏக் தின்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

R Vijayaraghavan - New Delhi,இந்தியா
22 ஜூலை, 2026 - 04:07 Report Abuse
R Vijayaraghavan எல்லா நடிகரும் நடிகைகளும் பிராட்
Rate this:
Roshan Hilmee - ,இந்தியா
20 ஜூலை, 2026 - 11:07 Report Abuse
Roshan Hilmee இது ஒரு நடை முறை இந்து மதப்படி ஒரு மாற்று மதத்தவர் திருமணம் செய்தால் பெயரளவில் ஒரு இந்து பெயரை சூட்டித்தான் அவருக்கு திருமணம் செய்வார்கள்.அது போன்று தான் மற்ற மதங்களிலும்.இதை பெரிதாக தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap