'ஓம்' புதிய ரிலீஸ் தேதி | இயக்கமா... நடிப்பா...? இயக்குனர் ஜேசன் சஞ்சய் பதில்! | காந்தாரா : வெளிச்சத்துக்கு வந்த தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி மோதல் | தாத்தா பிறந்த நாளில் புதிய படைப்பு அலுவலகத்தை திறந்த அல்லு அர்ஜூன்! | அடுத்தடுத்து திரைக்கு வரும் கீர்த்தி சுரேஷ் படங்கள்! | 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்': அக்.11ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி': நவ.,20ல் ரிலீஸ் | மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ஒரு வரம்: பாக்யஸ்ரீ போர்ஸ் நெகிழ்ச்சி | முதன்முறையாக தமிழில் படம் இயக்கும் ஆர்.பால்கி; நாயகியாக நடிக்கிறார் வித்யா பாலன் | 'க்ரோர்பதி' நிகழ்ச்சியின் போது கீழே விழுந்ததில் அமிதாப் பச்சனுக்கு காயம் |

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'சர்தார் 2'. சுமார் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் தியேட்டர் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சுமார் 20 கோடி மட்டுமே இந்தப் படம் வசூலித்ததாக சொல்லப்பட்டது.
அப்படத்துடன் வெளியான சூரி நடித்த 'மண்டாடி' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. கார்த்தி நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த இரண்டு படங்களான 'வா வாத்தியார், சர்தார் 2' ஆகிய இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன. 'வா வாத்தியார்' படம் ஓடிடியில் வெளியான போது கூட வரவேற்பைப் பெறவில்லை.
'சர்தார் 2' படம் இந்த வாரம் அக்டோபர் 1ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஓடிடி தளத்தில் வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




