Advertisement

சிறப்புச்செய்திகள்

சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட் படங்கள் | சன்னி தியோலின் சூர்யா வெளியீடு ஒத்திவைப்பு : நீதிமன்றத்தில் தடை கோரிய மருத்துவ சங்கம்! | மைசா படத்தின் விளம்பரப் பணிகளில் இறங்கப்போகும் ராஷ்மிகா | சீன் ரூ.260 கோடி வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்தது | பிளாஷ்பேக்: கதையின் நாயகனாகவும் கதாசிரியராகவும் எம் ஜி ஆர் பணியாற்றிய ஒரே திரைப்படம் | 957 மில்லியன் பார்வைகள் : புட்ட பொம்மா சாதனையை முறியடித்த சுயாதீன தெலுங்குப் பாடல் | சூர்யாவிடமிருந்து 'வாட்ச்' பரிசு பெற்ற 'சீன்' பட வில்லன் நஸ்லென் | 'தனுஷ், 3, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' பெயர்களை மறந்த அனிருத் !! | 'சத்தியவான் சாவித்திரி'க்கு என்னாச்சு? புரமோஷன் இல்லாமல் 'சைலண்ட்' | இப்போதெல்லாம் விழாக்களுக்கு அழைப்பு இல்லை: ஆர்.வி.உதயகுமார் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : கண்ணதாசனை கடனிலிருந்து மீட்ட தேவிகா

24 அக், 2026 - 01:06 IST
எழுத்தின் அளவு:
Flashback-Devika-rescues-Kannadasan-from-debt
Advertisement

சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் படங்களின் தோல்வியால், கடன் தொல்லையில் சிக்கித் தத்தளித்தார் கவிஞர் கண்ணதாசன். 'கடன் பிரச்னையை கடன் வாங்கித்தான் தீர்க்க முடியும்' என்று முடிவு செய்த கவிஞர் மேலும் கடன் வாங்கி தயாரித்த படம் 'வானம்பாடி'.

'ஷீஷ் பரிஷ்' வங்காள மொழி திரைப்படம் அங்கு தோல்வி அடைந்தது. அந்தப் படத்தை பார்த்த கண்ணதாசன் இதை வெற்றி படமாக்க முடியும் என்று நம்பினார். அதனால் துணிச்சலுடன் படத்தின் உரிமத்தை வாங்கி தயாரித்தார். 'கடனாளி மேலும் கடனாளியாக போகிறார்' என்று அப்போது பலர் அவரை கிண்டல் செய்தனர்.

ஆனால் 'வானம்பாடி' மிகப்பெரிய வெற்றி பெற்று கவிஞரின் கடன்களை எல்லாம் அடைத்தது. அதற்குக் காரணம் தேவிகா என்ற மூன்றெழுத்து நடிகை. நான்கு தோற்றம், இரண்டு வேடம் என்று படத்தில் நடிப்பு ராட்சசியாக வெளிப்பட்டார் தேவிகா. அதோடு தேவிகா படம் எப்போது வெளிவரும் என்று அன்றைய இளைஞர்கள் காத்துக் கிடந்த காலம் அது.

'காத்திருந்த கண்கள்' சாவித்ரிக்குப் பிறகு, இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு வானம்பாடியில் தேவிகாவுக்கு வாய்த்தது. ஓ.ஏ.கே. தேவரைச் சுட்டு விட்டு, ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயலும் மீனாவாகவும், கணவர் ஆர்.எஸ். மனோகரின் கொடுமை தாளாமல் வீட்டை விட்டு வெளியேறி, 'பாடகி கவுசல்யா' என்ற பெயரில் வாழும் 'அபலை சுமதி'யாகவும் மாறுபட்ட வேடங்கள் தேவிகாவுக்கு.

ஒளிப்பதிவாளர் ஜிஆர் நாதன் படத்தை இயக்குனர். கே.வி மகாதேவன் இசையமைத்தார். கங்கைக்கரை தோட்டம், தூக்கணாங்குருவிக் கூடு, ஊமைப் பெண் ஒரு கனவு கண்டால் , கடவுள் மனிதனாக, ஏட்டில் எழுதி வைத்தேன், யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம், போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் இடம் பெற்ற படமும் இதுதான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதியவர்களைத் தேடும் 'காந்தாரா' ரிஷப் ஷெட்டிபுதியவர்களைத் தேடும் 'காந்தாரா' ... சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ரசிக்கலாம் : 'சீன்' இயக்குநர் சொல்கிறார் சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap