பான் இந்தியா படங்கள்… பட்ஜெட் 1000 கோடி… ஆனால்? உதவி இயக்குநர்களின் பரிதாப உலகம்! | எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்திற்காக கர்நாடக சங்கீதம் கற்கும் ராஷ்மிகா | சரத்குமார் நடிக்கும் 177வது படம் ‛டாக்ஸி' | பெத்தி பாடல் சர்ச்சை குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல் | இஞ்சி வெல்லம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு | கிங் : கரீனா கபூரின் சிறப்புப் பாடல் நாளை வெளியாகிறது | வாரணாசி படத்துக்காக உடல் எடையை குறைத்த மகேஷ் பாபு | டிவி விவாத நிகழ்ச்சி சர்ச்சை : சேரன், திவாகர் மோதல் | கல்வியாளர் கந்தசாமி நாயுடு வாழ்க்கை சினிமா ஆகிறது | பிளாஷ்பேக்: இரட்டை எடிட்டர்கள் |

பட்டியல் இன மக்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கேரளாவில் கைது செய்த போலீசார் அதையடுத்து சென்னை கொண்டு வந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரிடத்தில் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதன்பிறகு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மீராமிதுன். மேலும் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்துவரும் போலீசாரிடம் அவர் அடிக்கடி மாற்றி மாற்றி பேசி வருவதால் மன நல மருத்துவரை கொண்டு விசாரணை தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் போதை மருந்து உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வந்த மீரா மிதுனின் தோழி ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு தற்போது நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த அவரது யூடியூப் சேனலை முடக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.




