Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : டுவின்சாக நடித்த சாவித்ரி

20 ஆக, 2026 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Flashback-Savitri-as-Twins
Advertisement

நடிகையர் திலகம் சாவித்ரி நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த வரிசையில் அவர் டுவின்சாக, அதாவது இரட்டை சகோதரியாக நடித்த படம் 'காத்திருந்த கண்கள்'. இதில் அவர் செண்பகம், லலிதா என்ற இரட்டை சகோதரிகளாக நடித்தார். இரட்டையர்களில் ஒருவரை மணந்து கொள்ளும் டாக்டராக ஜெமினி கணேசன் நடித்தார். இவர்கள் தவிர எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, பண்டரிபாய், ராகவன் உள்ளிட்ட பலர் நடித்தனர். டி.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். இந்த படம் வங்கத் திரைப்படமான 'ஸ்மிருதி டுக்கு தக்' என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும், தெலுங்கில் 'ஆஷா ஜோதி' என்ற பெயரில் வெளியானது.

ஒரு ஏழை தாய்க்கு பிறந்த இரட்டை சகோதரிகள் வறுமையின் காரணமாக பிரிகிறார்கள். அதாவது ஒரு மகளை தாய் வளர்த்துக்கொள்ள இன்னொரு மகளை ஒரு பணக்காரர் ஒருவருக்கு தத்து கொடுத்து விடுகிறார். தாய் இறக்கும் தருவாயில் மகளிடம் இரட்டை சகோதரிகள் பற்றிய ரகசியத்தை சொல்கிறார். மகளும் பணக்காரரிடம் வளரும் தன் சகோதரியை தேடிச் செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. படம் சாவித்ரியின் நடிப்பிற்காக பேசப்பட்டது. நல்ல வரவேற்பையும் பெற்றது.

"காற்று வந்தால் தலைசாயும் நாணல்" , "கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா" "ஓடம் நதியினிலே", "துள்ளித் திரிந்த பெண்ணொன்று" , "வா என்றது உருவம்" , "வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா" போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெற்ற படம் இது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிவி சாகசத்தால் நினைவாற்றலை இழந்த நடிகைடிவி சாகசத்தால் நினைவாற்றலை இழந்த ... பிளாஷ்பேக் : பாலிவுட்டில் நடித்த பிரசாந்த் பிளாஷ்பேக் : பாலிவுட்டில் நடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap